உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாராகிறது ரேனிகுண்டா 2ம் பாகம்

தயாராகிறது ரேனிகுண்டா 2ம் பாகம்

12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ரேனிகுண்டா. நிக் ஆர்ட்ஸ் சார்பில் சக்ரவர்த்தி தயாரித்த இந்த படத்தில் அவரது மகன் ஜானி ஹீரோவாக அறிமுகமானார். இதனை அப்போதைய புதுமுகம் பன்னீர் செல்வம் இயக்கினார். அதன்பிறகு 18வயசு, கருப்பன், நான்தான் சிவா படங்களை இயக்கினார்.

ரேனிகுண்டாவில் சனுஜா, தீப்பட்டி கணேசன், சஞ்சனா சிங் உள்பட பலர் நடித்தார்கள். மதுரையில் இருந்து ஆந்திராவுக்கு ஒரு அசைன்மெண்டுக்காக செல்லும் விடலை சிறுவர்களின் கதை. இந்த படத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் இயக்கி படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ரேனிகுண்டா படத்தின் 2ம் பாகத்தை இயக்குகிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் தீப்ஷிகா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !