புட்டபொம்மாவுக்கு ஆட தயாராகும் க்ரீத்தி சனான்
ADDED : 1590 days ago
கடந்த வருடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 'அல வைகுண்டபுரம்லு' என்கிற படம் வெளியானது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்தப்படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா என்கிற பாடல் இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரையும் வசீகரித்துவிட்டது. இந்தநிலையில் இந்தப்படம் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது என்கிற செய்தி ஏற்கனவே வெளியானது.
இந்தப்படத்தில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இந்தநிலையில் கதாநாயகியாக நடிகை க்ரீத்தி சனான் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. அந்தவகையில் புட்டபொம்மா பாடலின் இந்தி வெர்ஷனில் க்ரீத்தி சனான் எப்படி கலக்க போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.