உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்கா செல்ல சிறப்பு விமானம் : ரஜினிக்கு அனுமதி

அமெரிக்கா செல்ல சிறப்பு விமானம் : ரஜினிக்கு அனுமதி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்கிறார். அங்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக, சிறப்பு தனி விமானத்தில் செல்ல ஏற்பாடு நடக்கிறது.

இந்த தனி விமானத்தில், 14 பேர் பயணம் செய்யலாம். தான் மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த தனி சிறப்பு விமானத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு மத்திய அமைச்சர்களுடன் பேசியுள்ளார் ரஜினி.

இந்த இரண்டு அமைச்சர்களில் ஒருவர் தமிழர். அவரிடம் தமிழிலேயே பேசியுள்ளார் ரஜினி. இதையடுத்து, தனி விமானத்திற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !