கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யோகிபாபு
ADDED : 1576 days ago
சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அந்த போட்டோக்களை வெளியிட்டு பொதுமக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனான யோகிபாபுவும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருப்பவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் யோகிபாபு.