மகளுடன் வீடியோ- ஆனந்த யாழை மீட்டிய யுவன்
ADDED : 1624 days ago
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்களில் ராம் இயக்கி நடித்த தங்கமீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் ஸ்பெசலானது. தந்தை -மகள் பின்னணியில் ஒலிக்கும் அந்த பாடலை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார். ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடினார். இந்த நிலையில் தனது மகளின் கையை பிடித்தபடி தான் நடந்து செல்லும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யுவன் சங்கர் ராஜா, அதன் பின்னணியில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலை ஒலிக்க விட்டுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.