உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அண்ணாச்சி பட நடிகையின் சேற்று குளியல்

அண்ணாச்சி பட நடிகையின் சேற்று குளியல்

ஹிந்தி நடிகையான ஊர்வசி ரவுட்லா தமிழில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஜே.டி. - ஜெர்ரி இப்படத்தை பிரம்மாண்ட செலவில் இயக்கி வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமூக ஊடகத்தில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் ஊர்வசி, அடிக்கடி கவர்ச்சி போட்டோ, வீடியோக்களை பதிவிடுவார். இப்போது சேறுகளை உடல் முழுக்க பூசிய ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், ‛‛சேறு குளியல் தனக்கு பிடித்த ஒன்று. கிளியோபாட்ரோவும் இந்த குளியலை மிகவும் விரும்புவார். இது சருமத்திற்கு மிகவும் நல்லது'' என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை 12 லட்சத்திற்கும் அதிகமான பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !