உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூன் 20ல் எனிமி டீசர் வெளியீடு

ஜூன் 20ல் எனிமி டீசர் வெளியீடு

இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. அவர்களுடன் மம்தா மோகன்தாஸ, மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் எனிமி படத்தின் டீசர் ஜூன் 20ல் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. பாலாவின் அவன் இவன் படத்திற்குப் பிறகு விஷாலும், ஆர்யாவும் எதிரும் புதிருமாக நடித்துள்ள இப்படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !