விஜய்யின் ‛டார்கெட்' ?
ADDED : 1570 days ago
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளின்போது ரசிகர்களுக்கு தனது படங்கள் குறித்த புதிய அப்டேட்களை கொடுத்து, அவர்களுக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்து வருகிறார் விஜய். அந்த வகையில், வருகிற ஜூன் 22-ந்தேதி அவரது பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் கண்டிப்பாக சர்ப்ரைஸாக ஏதாவது அறிவிப்புகளை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். முக்கியமாக, தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65ஆவது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இப்படத்திற்கு டார்கெட் என தலைப்பு வைத்திருப்பதாக கூறி சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் ஒன்று உலா வருகிறது.