ரூ.5 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சுசீந்திரன்
ADDED : 1685 days ago
இயக்குனர் சுசீந்திரன் கொரோனா நிதி திரட்டும் வகையில் கடந்த 14ம் தேதி முதல் ஆன்லைன் கிளாஸ் நடத்தினார். இதில் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பற்றி வகுப்பெடுத்தார். இதில் சேர்வதற்கு ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் விதித்திருந்தார். இந்த ஆன்லைன் வகுப்பு மூலம் 5 லட்சம் ரூபாய் திரண்டது. அந்த தொகையை முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கினார். நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து இந்த நிதியை அவர் வழங்கினார்.