மாஸ்டர் ஷெப் ; விஜய்சேதுபதியுடன் கைகோர்த்த தமன்னா
ADDED : 1570 days ago
சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே சின்னத்திரை டாக் ஷோக்களிலும் தலைகாட்ட தயங்காதவர் விஜய்சேதுபதி. ஏற்கனவே நம்ம ஊரு ஹீரோ என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். தற்போது, மாஸ்டர் ஷெப் என்கிற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான புரோமோ கூட சமீபத்தில் வெளியானது.
இந்தநிலையில் இதே நிகழ்ச்சியை தெலுங்கில் ஜெமினி டிவிக்காக தொகுத்து வழங்க உள்ளார் நடிகை தமன்னா. இதற்கான புரோமோ ஷூட் நேற்று நடந்தது. இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பங்கேற்ற தமன்னா, செட்டில் தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்தப்புகைப்படம், விஜய்சேதுபதியின் கெட்டப் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது