படிப்புக்கு பாதியில் குட்பை சொன்ன இர்பான்கான் மகன்
ADDED : 1570 days ago
மொழி தாண்டி நேசிக்கப்படும் கலைஞர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர் திடீரென காலமானார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இவரது இரண்டு மகன்களில் ஒருவரான பபில் கான், லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பல்கலைகழகத்தில் படித்து வந்தார்.
தந்தையின் மறைவுக்கு பிறகு மும்பையிலேயே தங்கிய அவருக்கு நெட்பிளிக்ஸ் உருவாக்கும் தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஊரடங்கு காரணமாக லண்டனுக்கு செல்லாமல் இருந்த பபில் கான் தற்போது வெப்சீரிஸில் பிசியாகிவிட்டார். தனது தந்தையை பின்பற்றி நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதால் தனது படிப்புக்கு பாதியிலே குட்பை சொல்வதாக அறிவித்துள்ள இவர், தனது லண்டன் மாணவ நண்பர்களிடம் இந்த தகவலை கூறி பிரியா விடை பெற்றுள்ளார்.