உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பற்றிய சர்ச்சை கமெண்ட் : சமாளித்த சந்தீப் கிஷன்

விஜய் பற்றிய சர்ச்சை கமெண்ட் : சமாளித்த சந்தீப் கிஷன்

மாநகரம் படம் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக மாறியவர் சந்தீப் கிஷன். தெலுங்கிலும் ஓரளவு ரசிகர்கர்களையும், மினிமம் கியாரண்டி மார்க்கெட்டையும் பெற்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் அதாவது விஜய்யின் பிறந்தநாளன்று திடீரென விஜய் ரசிகர்களின் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகினார்..

காரணம் இதுதான்.. கடந்த வருடம் விஜய் பிறந்தநாளன்று அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து சொன்ன சந்தீப், “நான் அவரது மிகப்பெரிய ரசிகன்” என்றும் கூறியிருந்தார். ஆனால் கடந்த பத்து வருடங்களுக்கு முன் அதாவது விஜய்யின் சுறா படம் வெளியான சமயத்தில் “சுறா படம் பார்த்தேன்.. ஐதராபாத் வெயிலை விட இந்தப்படம் பெரிய டார்ச்சராக இந்தது. மூளை உருகி வெளியே வந்துவிட்டது” என்பது உள்ளிட்ட சில வார்த்தைகளை பயன்படுத்தி கிண்டலடித்து இருந்தார்.

இந்த இரண்டு டுவீட்டுகளையும் ஒன்றிணைத்து வெளியிட்ட ரசிகர் ஒருவர், 'எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ.” என விஜய்யை புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தான், விஜய் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளானார் சந்தீப்.

ஆனாலும் இதை கவனித்த சந்தீப், “இதுகுறித்து நான் எந்தவிதத்திலும் வெட்கப்பட போவதில்லை. விஜய் படங்களை பார்த்து வளர்ந்தவன் தான் நான். இடையில் வழக்கமான சினிமா ரசிகனாக மாறி போயிருந்தேன். ஆனால் இந்த பத்து வருடங்களில் விஜய்யின் கடின உழைப்பு என்னை இம்ப்ரெஸ் செய்து, என்னை அவரது மிகப்பெரிய ரசிகன் ஆக்கிவிட்டது” என சமாளிப்பாக பதில் அளித்துள்ளார் சந்தீப் கிஷன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !