ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை பாடி வீடியோ வெளியிட்ட நிவேதா தாமஸ்
ADDED : 1559 days ago
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஜெய் நடித்த நவீன திருவிளையாடல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிவேதா தாமஸ். ஆனபோதும் தொடர்ந்து கதாநாயகி வாய்ப்புகள் இல்லாததால் கமலின் பாபநாசம், ரஜினியின் தர்பார் படங்களில் மகள் வேடங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். இந்நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டரில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஒரு ஹிந்தி படத்தின் பாடலை கித்தாரை இசைத்தபடி பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.