மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1554 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1554 days ago
நடிகர் விஷால் மீது உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் டைட்டில் திருட்டு குறித்து புகார் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி: திரையுலகில் 15 ஆண்டுகளாக இணை இயக்குனராக உள்ளேன். விஷால் உடன் சக்ரா படத்தில் பணியாற்றிய போது, நான் உருவாக்கிய காமன் மேன் படத்தின் கதையை கூறினேன். நான் பதிவு செய்து வைத்திருந்த காமன் மேன் தலைப்பை விஷால் அபகரிக்க நினைக்கிறார். இத்தனைக்கும் நான் டைட்டில் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூறிய நிலையில் மவுனமாக இருந்து விட்டு இன்று அவரது படத்திற்கு ‛நாட் எ காமன் மேன்' என்ற பெயரை சப்டைட்டிலாக வைத்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது விஷால் தரப்பில் பதில் இல்லை. ஆனால், மறைமுகமாக அவரது நண்பர்கள் மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். திரையுலகில் டைட்டில் கட்டப்பஞ்சாயத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இதுகுறித்து உதயநிதியிடமும் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
1554 days ago
1554 days ago