திலீப் குமார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
ADDED : 1601 days ago
பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப் குமார். தேவதாஸ், ஆசாத் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 98 வயதான திலீப் குமார், ஜூன் மாத துவக்கத்தில் மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைக்கு பின் நலமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.