உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புது வீட்டில் குடி புகும் 'கேஜிஎப்' யஷ்

புது வீட்டில் குடி புகும் 'கேஜிஎப்' யஷ்

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ். 2018ம் ஆண்டு வெளிவந்த 'கேஜிஎப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். அப்படத்தின் இரண்டாம் பாகமான 'கேஜிஎப் 2' படத்தின் டீசர் வெளிவந்து பல புதிய சாதனைகளைப் படைத்தது.

யஷ், நேற்று பெங்களூருவில் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கான கிரஹப்பிரவேசத்தை இந்து மத முறைப்படி செய்தார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் அதில் கலந்து கொண்டனர். அந்தப் புகைப்படங்களை யஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

யஷ் அவரது மனைவி ராதிகா பண்டிட் இருவரும் 2008ல் வெளிவந்த 'மொக்கின மனசு' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வருவதாக ஒரு கிசுகிசு உண்டு. 2014ல் வெளிவந்த 'மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி' படத்திற்குப் பிறகு அது அதிகமானது. 2016ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

தற்போது கன்னடத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யாஷ் என்று சாண்டல்வுட்டில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !