பாகுபலி வெப்தொடர் : ரம்யா கிருஷ்ணன் இல்லையா?
ADDED : 1553 days ago
பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களை இயக்கிய ராஜமவுலி, தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை அடுத்த நெட்பிளிக்சுக்காக பாகுபலி என்றொரு வெப்தொடரை இயக்கப் போகிறார். 9 எபிசோடுளில் தயாராகும் இந்த தொடர் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களிலும் சிவகாமி என்ற வேடத்தில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அவருக்குப் பதிலாக அந்த வேடத்தில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்த வாமிகா கபி நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.