மனம் வலிக்கிறது : சமந்தா
ADDED : 1600 days ago
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் ‛தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸ் நடித்தார். இந்த தொடருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அதேசமயம் பிறமொழிகளில் சமந்தாவின் நடிப்பை பாராட்டினர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் தான் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து வேதனை அடைந்துள்ளார் சமந்தா.
இதுப்பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்கள், சீண்டல்களை எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல. யாரோ ஒருவர் சொல்கிறார் என கடந்து செல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும்போது மனம் மிகவும் வலிக்கிறது. சினிமாவில் பல ஆண்டுகளாக இருப்பதால் இதை கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கையாலேயே இவற்றையெல்லாம் சமாளித்து வருகிறேன் என்கிறார் சமந்தா.