பரசுராம் கிருஷ்ணமூர்த்தியாக மாறும் அய்யப்பனும் கோஷியும்
ADDED : 1567 days ago
மலையாளத்தில் கடந்த வருடம் பிரித்விராஜ் - பிஜுமேனன் நடிப்பில் மறைந்த இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும். ஒய்வு பெறப்போகும் போலீஸ் அதிகாரிக்கும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவருக்கும் நடக்கும் ஈகோ மோதல் தான் படத்தின் கதை.
இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிக்கின்றனர். இந்தநிலையில் இந்தப்படத்திற்கு பரசுராம் கிருஷ்ணமூர்த்தி என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அனேகமாக பரசுராம் கேரக்டரில் பவன் கல்யாணும் கிருஷ்ணமூர்த்தியாக ராணாவும் நடிப்பார்கள் என தெரிகிறது.