உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜீவஜோதி வாழ்க்கை படமாகிறது

ஜீவஜோதி வாழ்க்கை படமாகிறது

ஜீவஜோதி - பிரின்ஸ் சாந்தகுமார் வாழ்க்கையில் 'சரவணபவன்' ராஜகோபால் உடன் நடந்த சட்ட போராட்டம் படமாக உருவாகிறது. ஜங்லீ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜீவஜோதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை, அது குறித்த வீடியோ, ஆடியோ, உண்மை செய்திகள், அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு திரைக்கதையாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இப்பட திரைக்கதையை பவானி ஐயர் எழுதுகிறார்.

ஜீவஜோதி கூறுகையில், 'ஓட்டல் ஊழியர் உடனான என் சட்ட மற்றும் உணர்ச்சிபூர்வமான போரைப்பற்றி படம் உருவாவதில் மகிழ்ச்சி. 18 ஆண்டு கால கதையை பெரிய திரையில் பார்ப்பது, ஆணாதிக்கத்தின் நிலைமையில் கடுமையான மாற்றத்தை கொண்டு வரும்' என்றார். நடிகர், நடிகையர் தேர்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !