உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாவடிச்சுடுவேன்... ரசிகருக்கு சித்தார்த் மிரட்டல்

சாவடிச்சுடுவேன்... ரசிகருக்கு சித்தார்த் மிரட்டல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு செய்திருந்தார். மேலும் அந்த பதிவோடு திலிப் குமாரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு வந்தார்.

இந்த பதிவைப் பார்த்த ரசிகர் ஒருவர் புகைப்படத்தில் இருப்பவரை பார்க்கும்போது அக்ஷய்குமார் மாதிரியே இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான சித்தார்த் டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு என பதில் அளித்துள்ளார். மேலும் அந்த ரசிகர் நான் பார்ப்பதற்கு முகம் அப்படி இருக்கு என்று தான் சொன்னேன். நான் சொன்னதில் தவறு ஏதும் இல்லையே என பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !