மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1546 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1546 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1546 days ago
தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் அதன் நிர்வாகிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலத்தில் சந்தித்தனர். அவரிடம் சங்கத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்கள்.
இந்த சந்திப்புக்கு பிறகு சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வரைச் சந்தித்தோம். அப்போது எங்களுடைய சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக 50 லட்ச ரூபாய் வழங்கினோம்.
தற்போதைய எங்களது சிரமங்களைத் தமிழக முதல்வரிடம் சொன்னோம். கட்டாயம் எங்களுடைய அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி கொடுப்பார்கள், அதற்கான அறிவிப்பு விரைவில் இருக்கும் என நம்புகிறோம். அரசாங்கம் என்ன விதிகள் சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு திரையரங்குகளைத் திறக்க ஆவலுடன் இருக்கிறோம்.
திரையரங்குகள் திறக்கப்பட்டால் தயாரிப்பாளர்கள் யாருமே ஓடிடி வெளியீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். திரையரங்குகள் மூடியிருப்பதால்தான் ஓடிடிக்குச் செல்கிறார்கள். ஆகையால், நாங்களும் எதுவுமே சொல்ல முடியாமல் இருக்கிறோம். திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே ஓடிடி வெளியீட்டுக்குச் செல்லவுள்ளார்கள்.
கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்ததால் தொழில்வரி, சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். குறைந்தபட்ச மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், 8 சதவிகித கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வரிடம் மனுவாக கொடுத்துள்ளோம். என்றார்.
1546 days ago
1546 days ago
1546 days ago