உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோயின் ஆனார் தேஜு அஸ்வினி

ஹீரோயின் ஆனார் தேஜு அஸ்வினி

சென்னையை சேர்ந்த தேஜு அஸ்வினி ஒரு புகழ்பெற்ற யூ-டியூப்பர். இவர் நடித்த கல்யாண சமையல் சாதம் பெரும் வரவேற்பை பெற்றது. நிறைய இசை ஆல்பங்களில் ஆடியுள்ளார். குறிப்பாக தருண் குமார் இசை அமைப்பில் வெளியான அஸ்கு மாரோ ஆல்பத்தில் கவினுடன் ஆடி இருந்தார்.

சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் சந்தானத்துடன் வலி மாங்கா வலிப் புலி மாங்கா புலிப் பாடலுக்கு ஆடியிருந்ததோடு சிறிய கேரக்டரில் நடிக்கவும் செய்திருந்தார். இந்தநிலையில் தற்போது பிக் பாஸ் புகழ் அஸ்வின் நடிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிறார். இந்த படத்தை ஹரிஹரன் இக்குகிறார். டிரைடன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !