உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்... வலிமை மோஷன் போஸ்டர் சாதனை

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் தான்... வலிமை மோஷன் போஸ்டர் சாதனை

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நேற்று முன் தினம் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து வெளியான அப்டேட்டுகளால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

யூடியூப்பில் வெளியான இதன் மோஷன் போஸ்டர் வீடியோவானது வெளியான 15 மணி நேரத்தில் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கிறது. அதோடு, போஸ்டர் இணையத்தில் 5 மில்லியன் லைக்குளை 12 மணி நேரத்தில் கடந்து சாதனைப் படைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !