ஓடிடியில் வெளியாகும் ராணா - சாய் பல்லவி படம்
ADDED : 1546 days ago
தெலுங்கில் ராணாவுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ள படம் விராட்டா பர்வம். 1990களில் தெலுங்கானா கிராமத்தில் நடந்த ஒரு காதல் கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. வேணு உடுகுலா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என்று கூறி வந்தார்கள். ஆனால் இப்போது தியேட்டரில் வெளியிடுவதற்காக காத்திருந்த வெங்கடேசின் நாரப்பா ஜூலை 20-ந்தேதி அமேசானில் வெளியாகிறது. அதற்கடுத்த மாதம் மேஸ்ட்ரோ என்ற தெலுங்கு படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
இதைப்பார்த்த விராட்டா பர்வம் படக்குழுவும், தியேட்டரில் தான் வெளியிடவேண்டும் என்று எடுத்திருந்த முடிவில் இருந்து மாறி தற்போது நெட்பிளிக்சுடன் பேசி வருகின்றனர். அடுத்த மாதம் இப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.