மீண்டும் தனுசுடன் இணையும் ஹன்சிகா
ADDED : 1546 days ago
2010ல் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ஹன்சிகா. அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தனுசுடன் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மஹா படத்தை அடுத்து மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, அடுத்து தமிழில் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுசுக்கு ஜோடியாக மூன்று நாயகிகளில் ஒருவராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனுசுடன் இணைந்து நடிக்கப் போகிறார் ஹன்சிகா.