10 மில்லியனை கடந்த வலிமை மோஷன் போஸ்டர்
ADDED : 1545 days ago
வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛வலிமை'. இன்னும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே படமாக வேண்டி உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்தனர். திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஞாயிறு அன்று மோஷன் போஸ்டர் உடன் பல போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் தள்ளினர் படக்குழுவினர்.
இந்த போஸ்டருக்கு சில விமர்சனங்கள் எழுந்தாலும் திடீரென வந்த போஸ்டரும் சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இந்த நமோஷன் போஸ்டர், யு டியூபில் 10 மில்லியன் பார்வைகளைப் கடந்து சாதனை படைத்துள்ளது. இதையும் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.