1 கோடி - தனுஷ் செய்த சாதனை
ADDED : 1542 days ago
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றுவிட்டார் நடிகர் தனுஷ். தற்போது இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. அடுத்தப்படியாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இதை இந்தியா முழுக்க பிரம்மாண்டமாய் வெளியிட எண்ணி உள்ளனர். இந்நிலையில் டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் தனுஷை ஏகப்பட்ட ரசிகர்கள் பின் தொடருகின்றனர். இப்போது இவரை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை 10 மில்லியன் அதாவது 1 கோடியை எட்டி உள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சாதனையை பெறும் முதல் நடிகர் தனுஷ் ஆவார்.