விருதுகளை குவித்த ஒற்றைப் பனை மரம்
ADDED : 1603 days ago
ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். மண் பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. அஷ்வமித்ரா இசை அமைத்துள்ளார். மகிந்த அபேசிங்கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை குவித்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய உள்ள பெரும்பாண்மையான கலைஞர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். தியேட்டரில் அல்லது ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகிறது.