உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழுக்கு வரும் அவந்திகா மிஸ்ரா

தமிழுக்கு வரும் அவந்திகா மிஸ்ரா

டில்லியை சேர்ந்த மாடல் அழகியான அவந்திகா மிஸ்ரா, மாயா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்து விட்டு அசோக் செல்வன் ஜோடியாக நெஞ்சமெல்லாம் நீயே, அருள்நிதி ஜோடியாக டி பிளாக் படங்கள் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் டி பிளாக் படம் முதலில் வெளிவருகிறது.

இதில் உமா ரியாஸ், தலைவாசல் விஜய், கரு பழனியப்பன், லல்லூ, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார், கணேஷ் சிவா இசைஅமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் கூறியதாவது: இது த்ரில்லர் வகை படம் இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவரின் பாத்திரத்தில் அருள் நிதி நடிப்பதால், அவர் 7 கிலோவைக் குறைத்து மிக அழகான இளமையான தோற்றத்திற்கு மாறினார் . இந்த படத்தின் மூலம் அவந்திகா மிஸ்ரா தமிழுக்கு வருகிறார். நான் அருள்நிதியின் நண்பராக நடித்திருக்கிறேன். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !