4 மொழிகள், 55 நாடுகளில் வெளியாகும் விக்ராந்த் ராணா
ADDED : 1551 days ago
கன்னட நடிகர் கிச்சா சுதீப் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பிரமாண்டமாக தயாராகி வரும் படம் விக்ராந்த் ராணா. இந்த படம் திரையரங்கு வெளியீட்டுக்கென்று 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் பேண்டசி படம். இதில் சுதீப்புடன் நிரூப் பண்டாரி, நீத்தா அசோக், ரவிசங்கர் கவுடா, வாசுகி வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆடும் பாடல் காட்சி ஒன்று 6 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் 300 நடன கலைஞர்கள் பங்கேற்று ஆடினார்கள். ஜானி நடன இயக்குனராக பணியாற்றினார்.
படத்தை ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள். அனூப் பண்டாரி இயக்குகிறார். படத்தை கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியிடுகிறார்கள்.