மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1506 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1506 days ago
தமிழ் சினிமாவில் 'கண்களால் கைது செய்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. பின்னர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் 2007ல் வெளிவந்த 'பருத்தி வீரன்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர். இரு தினங்களுக்கு முன்புதான் பிரியாமணி கதாநாயகியாக நடித்த 'நரப்பா' படம் ஓடிடியில் வெளியானது.
ஏற்கெனவே, ஆயிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான முஸ்தபா ராஜ் என்பவரை 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி. தற்போது ஆயிஷா தனது கணவரின் இரண்டாவது திருமணம் செல்லாது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முஸ்தபா என்னை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. பிரியாமணியைத் திருமணம் செய்து கொண்ட போது தன்னை பேச்சுலர் என நீதிமன்றத்தில் தெரிவித்தார். நாங்கள் இருவரும் நீதிமன்றத்தில் இதுவரை விவாகரத்து வழக்கு தொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, ‛‛என் மீது ஆயிஷா பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். குழந்தைகளின் செலவுளுக்காக நான் அவருக்கு தவறாமல் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்கிறார். 2010ம் ஆண்டே நாங்கள் பிரிந்துவிட்டோம், 2013ல் விவகாரத்தும் வாங்கியுள்ளோம். எனக்கு பிரியாமணியுடன் திருணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் ஏன் இப்படி குற்றம் சொல்ல வேண்டும்'' என்றும், முஸ்தபா கேள்வி எழுப்புகிறார்.
“தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதால் இத்தனை வருடங்களாக பிரச்சினைகளை முடிக்கவே பார்த்தேன், ஆனால், எதுவும் நடக்கவில்லை. எனவே, சட்டப்பட நடவடிக்கை எடுக்க உள்ளேன்,” என ஆயிஷா கூறி வருகிறராராம்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியாமணி இந்த விவகாரம் குறித்து இன்னும் எதுவும் சொல்லவில்லை.
1506 days ago
1506 days ago