சூர்யாவின் ‛எதற்கும் துணிந்தவன்'
ADDED : 1620 days ago
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சூர்யாவின் 40வது படமாக தயாராகும் இப்படம் பொள்ளாச்சியில் பின்னணியில் நடக்கிறது. கொரோனாவால் தடைப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ‛எதற்கும் துணிந்தவன்' என பெயரிட்டுள்ளனர். நாளை சூர்யாவின் பிறந்தநாள். இதையொட்டி இந்த அறிவிப்பு இன்று(ஜூலை 22) வெளியானது. படத்தின் பர்ஸ்ட் லுக் உடன் கூடிய சிறிய டீசர் வெளியாகி உள்ளது. டீசரில் சூர்யா, நீண்ட தலைமுடி, கையில் வாள், துப்பாக்கி என சிலரை போட்டுதள்ளுவது போன்று உள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு இப்பட அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர்.