உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தியேட்டருக்கு தான் ‛லிப்ட்'

தியேட்டருக்கு தான் ‛லிப்ட்'

பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாகவும், ஹீரோயினாக அம்ரிதாவும் நடித்துள்ள படம் ‛லிப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் இப்படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல் வெளியானது.

இதை மறுத்துள்ளார் இப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன். அவர் கூறுகையில், ‛‛100 சதவீதம் இருக்கையுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் போது லிப்ட் வெளியாகும். இது தியேட்டருக்கான படம். ஓடிடி என்ற தகவலை நம்ப வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !