உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபல நிகழ்ச்சியிலிருந்து விலகிய காமெடி ராஜா

பிரபல நிகழ்ச்சியிலிருந்து விலகிய காமெடி ராஜா

காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலிருந்து விஜய் டிவியின் காமெடி ராஜாவான புகழ் வெளியேறியுள்ளார். அதற்கான காரணத்தை வீடியோ பதிவின் மூலம் அவர் வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பான இந்த காமெடி ஷோவிலும், புகழ் வழக்கம் போல் பெர்பார்மன்ஸ் செய்து கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் ஒளிப்பரப்பான அந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் இந்த தகவலை விஜய் டிவி வெளியிட்டது. மேலும், அதே எபிசோடில் புகழ் பேசிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் பேசிய புகழ், தனக்கு சினிமா வாய்ப்புகள் வருவதால் அதன் பொருட்டு தற்காலிகமாக நிகழ்ச்சியிலிருந்து விலகி கொள்வதாக தெரிவித்தார். மேலும் மிக விரைவில் வலிமையோடு உங்களை வந்து சந்திக்கிறேன் என்றும் கூறினார்.

சின்னத்திரையில் தனது நகைச்சுவையால் பல ரசிகர்களை கவர்ந்த புகழ் வெள்ளித்திரைக்கும் சென்று கலக்கவுள்ளார். இதனையடுத்து புகழுக்கு அவரது நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !