உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உடல் எடையை குறைத்து கவர்ச்சிக்கு மாறிய ஷாலினி பாண்டே

உடல் எடையை குறைத்து கவர்ச்சிக்கு மாறிய ஷாலினி பாண்டே

தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு மேரி நிம்மோ என்ற இந்தி படத்தில் நடித்தார். தமிழில் 100 பிரசண்ட் காதல் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார். சற்று குண்டான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய முகம் என்று தெலுங்கு சினிமாவில் இருந்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் அதிகமானார்கள்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'நடிகையர் திலகம் படத்தில் நடித்திருந்தார். ஜீவாவுடன் 'கொரில்லா', அனுஷ்காவுடன் நிசப்தம் படத்தில் நடித்து இருந்தார். இந்தியில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து இருந்த இவர் சமீபத்தில் கவர்ச்சியாக போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். அடையாளமே தெரியாத அளவிற்கு எடை குறைந்த ஷாலினி பாண்டே ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !