ஏழு ஆண்டுகள் கழித்து கன்னடத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் த்ரிஷா
ADDED : 1579 days ago
கடந்த 20 ஆண்டுகளாக இன்னும் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். தமிழில் தற்போதும் சில படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் கன்னடத்தில் இது த்வித்வா என்கிற படத்தில் புனித ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகிறார்.
கன்னடத்தில் இதுவரை 'பவர்' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார் த்ரிஷா. அந்தப்படத்திலும் புனித ராஜ்குமாருக்கு ஜோடியாகத்தான் நடித்திருந்தார். அந்தகையில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் த்ரிஷா. யு டர்ன் படத்தை இயக்கிய பவன் குமார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.