தெலுங்கில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ்
2 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. படம் பற்றிய பரவலான பாராட்டுகள் இருந்தாலும் படம் வியாபார ரீதியான வெற்றியை பெறவில்லை. விஜய் சேதுபதியின் திருநங்கை கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. இதற்காக அவருக்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.
இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழில் காண கிடைக்கிறது. இந்த நிலையில படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வருகிறார்கள். மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. உப்பென்னா படத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய்சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்ததை தொடர்ந்து ஆஹா ஓடிடி தளம் படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.