லூசிபர் தெலுங்கு ரீமேக் : தலைப்பு பரிசீலணையில் மோகன்ராஜா
ADDED : 1531 days ago
மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை சிரஞ்சீவி நடிப்பில் இயக்குகிறார் மோகன்ராஜா. இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தநிலையில் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்திற்கு தற்போது தலைப்பு பரிசீலனையில் ஈடுபட்டுள்ளார் மோகன்ராஜா. அந்த வகையில், கிங்மேக்கர், காட்பாதர் என சில தலைப்புகளை தேர்வு செய்துள்ளார். இவற்றில் ஒன்றை படத்திற்கு வைப்பதற்கு முடிவு செய்துள்ளார். இதில் காட்பாதர் என்ற தலைப்பு தான் படக்குழுவில் உள்ள அதிகமான நபர்களுக்கு பிடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இந்த தலைப்பையே சிரஞ்சீவி படத்திற்கு வைக்க மோகன்ராஜா திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.