காளிதாஸ், அசோக் செல்வன், துஷாராவை இயக்கும் ரஞ்சித்
ADDED : 1580 days ago
ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்த துஷாராவின் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். தற்போது வசந்தபாலன் இயக்கும் படத்தில் அர்ஜூன் தாஸ் ஜோடியாக நடித்து வரும் துஷாரா அடுத்து ரஞ்சித் படத்தில் மீண்டும் நடிக்கிறார். நட்சத்திரம் நகர்கிறது என்ற பெயரில் உருவாகும் இப்படம் காதல் கதையில் உருவாகிறது. இதில் நாயகர்களாக அசோக் செல்வன், ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கின்றனர். நாயகியாக துஷாரா நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.