சீனு ராமசாமி படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாகும் காயத்ரி
ADDED : 1537 days ago
சீனுராமசாமி இயக்கத்தில் முபாரக் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஆக. 2ல் தொடங்குகிறது. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க இவருக்கு ஜோடியாக காயத்ரி ஷங்கர் நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சீனுராமசாமி அளித்த பேட்டி: ஆக்சன் நிறைந்த த்ரில்லர் கதைக்களத்தை முதல்முறையாக கிராமத்தில் உருவாக்கியுள்ளோம். ஆண்டிப்பட்டி, தேனி மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடக்கிறது. படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்க, வைரமுத்து பாடல் எழுதுகிறார். படப்பிடிப்பு துவங்கும் முன்பே, படத்திற்கான வியாபாரம் தொடங்கி விட்டது. இரண்டு ஓ.டி.டி., நிறுவனங்கள் பேசி வருகின்றனர். படத்தை தியேட்டரிலா அல்லது ஓ.டி.டி.,யிலா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.