உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆந்திரா, தெலங்கானாவில் தியேட்டர்கள் திறப்பு : ரசிகர்கள் ஆதரவு

ஆந்திரா, தெலங்கானாவில் தியேட்டர்கள் திறப்பு : ரசிகர்கள் ஆதரவு

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட தியேட்டர்களை தமிழகத்தில் இன்னும் திறக்கவில்லை. ஆனால், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் திறந்துவிட்டார்கள்.

இன்று வெளியான 5 புதிய தெலுங்கு திரைப்படங்களும், முன்பு வெளியான சில படங்களையும், சில ஆங்கில, ஹிந்திப் படங்களையும் திரையிட்டுள்ளார்கள். 50 சதவீத இருக்கைகளுடன் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதில் சில படங்களுக்கு 50 சதவீத இருக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளது தெலுங்கு திரையுலகினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கிள் தியேட்டர்களை விட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் அதிக அளவில் வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை, நாளை மறுதினமும் விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கிறார்கள். மூன்றாவது அலை வரும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தாலும் தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்துவிட்டதைப் போல தமிழகத்திலும் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைக்குமா என இங்குள்ள தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !