ஐபிஎஸ் அதிகாரியாக மாறும் ராதிகா ஆப்தே
ADDED : 1554 days ago
மலையாளத்தில் கடந்த வருடம் மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படமாக வெளியான பாரன்சிக், மிகப்பெரிய வெற்றி பெற்றது. நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் மம்தா மோகன்தாஸ் நடித்திருந்த இந்தப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் விக்ராந்த் மாசே மற்றும் ராதிகா ஆப்தே இருவரும் நடிக்க இருக்கிறார்கள்.
தொடர் கொலைகளை செய்யும் ஒரு கொலைகாரனை பாரன்சிக் டிபார்ட்மெண்ட் மூலம் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து இந்தப்படம் உருவாகி இருந்தது. பாரன்சிக் அதிகாரியாக டோவினோ தாமஸ் நடித்திருந்தார். இந்த வழக்கை கையாளும் ஐபிஎஸ் அதிகாரியாக மம்தா மோகன்தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் தான் ராதிகா ஆப்தே நடிக்கிறார். இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக அவர் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.