தெலுங்கில் செம பிஸியான சமுத்திரகனி
ADDED : 1527 days ago
நடிப்பில் பிஸியாக உள்ள சமுத்திரகனி தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். அலவைகுந்தபுரம், கிராக் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது ராஜ மவுலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதையடுத்து தேஜா நடிக்க உள்ள படம் உள்பட மேலும் இரண்டு புதிய படங்களிலும் கையெழுத்திட்டுள்ளார் சமுத்திரகனி. முக்கியமாக அவர் நேர் மறை, எதிர்மறை என எந்தமாதிரியான வேடங்களில் சமுத்திரகனி நடித்தாலும் தெலுங்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுக்கிறார்களாம். இதனால் ஐதராபாத்திலேயே முகாமிட்டுள்ளார் சமுத்திரகனி.