சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா
ADDED : 1536 days ago
அயலான், டாக்டர் படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதையடுத்து கே.வி.அனுதீப் இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் தகவல் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், தற்போது அப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நாராயண் தாஸ் நாரங், புஸ்கூர் ராம்மோகன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இருமொழி படமாக உருவாவதால் இரண்டு மொழிகளிலும் பிரபலமாக உள்ள ராஷ்மிகாவை தேர்வு செய்துள்ளனர்.