ராம் படத்தில் அஞ்சலி, சூரியும் இணைந்தனர்
ADDED : 1569 days ago
கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து தனது அடுத்த படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார் ராம். இதற்கு முன்பு தமிழில் நேரம், ரிச்சி படங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி. இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில் தற்போது அஞ்சலி, சூரி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்துள்ள சுரேஷ்காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை யமைக்கிறார். சூரி, இந்தபடத்தில் காமெடியனாக இல்லாமல் நிவின் பாலிக்கு இணையான இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.