சிம்புவுக்கு கைமாறிய விஜய் சேதுபதி படம்
ADDED : 1638 days ago
விஜய் சேதுபதி நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கியவர் கோகுல். அதன்பிறகு கார்த்தி நடிப்பில் காஷ்மோரா படத்தை இயக்கினார். இந்நிலையில் அடுத்தபடியாக இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக கொரோனா குமார் என்ற படத்தை விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், விஜய் சேதுபதி பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருவதால் அவரது கால்சீட் பிரச்சினை காரணமாக கொரோனா குமார் படத்தை சந்தானத்தை வைத்து கோகுல் இயக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது சிம்பு அப்படத்தில் நடிப்பதாகவும், செப்டம்பர் 20-ந்தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை ஐசரிகணேஷ் தயாரிக்கிறார்.