மகனுக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்
ADDED : 1637 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதானா என்ற மகள் உள்ளார். கடந்த ஜூலை 12ல் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ‛‛மறைந்த தன் அப்பாவே மகனாக பிறந்ததாக'' மகிழ்ச்சி உடன் டுவிட்டரில் கூறியிருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தனது மகனுக்கு முத்திமிட்ட போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்து, ‛‛எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அன்போடும், ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர் சூட்டியிருக்கிறோம்'' என பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.