பழைய தோற்றத்தை மீட்டெடுத்த தமன்னா
ADDED : 1524 days ago
திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண குணமடைந்துவிட்டப்போதிலும் போதிலும் உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார்.
பொதுவாக நடிகைகள் தங்களது உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பார். அதிலும் நடிகை தமன்னா ஒரேமாதிரியான உடல் கட்டமைப்போடுதான் இருப்பார். இதையடுத்து தன் மெலிந்த உடலை மெருகேற்ற தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு பழைய தோற்றத்தை மீட்டெடுத்துள்ளார்.