உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வடிவேலுவின் புதிய அவதாரம்

ஓடிடியில் வடிவேலுவின் புதிய அவதாரம்

சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு வெப் தொடர் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஓடிடி தளம் ஆஹா. இந்நிறுவனம் விரைவில் தமிழகத்தில் அறிமுகமாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கை போலவே தமிழிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்க பல்வேறு தமிழ் திரை பிரபலங்களை ஆஹா நிறுவனம் அணுகி உள்ளது. அந்த வகையில் நடிகர் வடிவேலுவிடம் தங்கள் ஓடிடிக்காக காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க கோரி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இறுதியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் வடிவேலு சம்மதம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடிவேலுவை எந்த வகையிலாவது மீண்டும் திரையில் பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !